இலங்கை (இந்தியா) கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா...
| தலையங்கம்
“கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 6 மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெடுந்தீவு பங்குத் தந்தை எமி பால் அடிகளார் கொடியேற்றி புனித விழாவைத் துவக்கி வைத்தார்.
14 இடங்களில் சிலுவை நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு நிலைப்பாடும் விளக்கப்பட்டது.
சிலுவைப் பாதையைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இரவு புனித அந்தோணியார் தேர் பவனி நடந்தது.
இந்தியா மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பெருமளவில் மீனவர்களே கலந்து கொண்டனர்.
இருநாட்டுக் கசப்புகளையும் கச்சத்தீவு கடற்கரைகளில் கழுவிக் கொண்டனர்.
திருவிழாவிற்கு தமிழகத்திலிருந்து 2,881 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால், 2070 பேர் மட்டுமே விழாவில் பங்கேற்றனர்.
நமக்கிருக்கும் ஆதங்கமெல்லாம் இலங்கை கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா என்பது இந்தியாவின் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா என்று எப்போது கொண்டாடுவோம்?
திருவிழாவிற்கு இலங்கை அமைச்சர் தேதி குறிப்பதிலிருந்து எப்போது தமிழக அமைச்சர் தேதி குறிப்பார்?
கையிலிருந்த பொக்கிஷத்தைக் காவு கொடுத்து விட்டு களவாண்டவனிடம் அனுமதிச் சீட்ட கேட்டு நிற்கும் அவலம் எப்போது மாறும்?
- பொறுப்பாசிரியர்