சமூக வலைத்தளங்களை எடுத்த எடுப்பிலே நம்பாதீர்கள்...
இன்னைய தேதில மிக உயர்ந்த படிப்பு, பாஸ் பண்றதுக்கே திணறவேண்டிய படிப்பு..
சமூக வலைத்தளங்கள்ல எது உண்மை எது டுபாக்கூர் விஷயம்னு கண்டுபிடிச்சி கண்டுக்காம போறதுதான்..சிம்பிளா புரியறா மாதிரி சொல்லுவோம்.
புதுசா தெருவுக்கு புருஷனோட குடித்தனம் வந்தது அழகான 35 வயசு பொம்பளை, குழந்தை கிடையாது.
தெருவுல இருக்கிறவன்ல ஒன்னு ரெண்டு பேர் தவிர சபலிஸ்ட்டுங்க. ஒருத்தனுக்கு தெரியாம, இன்னொருத்தன் அப்படின்னு எல்லோருமே லேடிக்கு நூல் விட ஆரம்பிச்சாங்க.. லேடியும் ஒருத்தன் கிட்ட பேசுறது இன்னொருத்தன் கிட்ட தெரியாத அளவுக்கு நடந்து, எல்லாரையும் சீக்ரெட் கஸ்டடில கொண்டு வந்துடிச்சி..
ஆம்பளைங்களுக்கோ, அவ புருஷனுக்கு தெரியாம நாம எவ்ளோ சாமார்த்தியமா வளைச்சுட்டும்னோ மனசுல செம மெதப்பு..
மோஷன், டீசர்,டிரெயிலர்ன்னு லேடி பெப்பு கூட்டி வந்தாலும் மெயின் பிக்சரு மட்டும் நோ, வெயிட் பண்ணுடா செல்லம் , அவர் ஆபிஸ்டூர் போனதுக்கு அப்புறம்எல்லாமே உனக்குத்தான். ஒரே டயலாக்.. , எல்லாருக்கும் வாய்ஸ் ஜெராக்ஸ். (அப்போ வீடியோ செல்போனே வரலை. செங்கல் போன்தான் இன் கமிங் அவுட்கோயிங் எதுவானாலும் ஒரு காலுக்கு 16 ரூபாய்)
முக்கியமான கட்டத்துக்கு மட்டும் யாரையும் நெருங்கவிடாம, ஆனா விதவிதமான கஷ்டத்தை சொல்லி கண்ணீர் விட்டு லேடி வசூல்ல இறங்கிடிச்சு. அதுல ஒருத்தரு ஆபிஸ்ல லோன் போட்டு வெயிட்டா குடுத்தாரு.
ஒன்றரை மாசம் ஆச்சு, திடீர்னு, வீட்டுக்காரர் வகையில ஒரு கல்யாணம், அவர் அங்கேயே நாலு நாள் இருப்பாரு, நான் மட்டும் வந்துடுவேன்னு, ஒரு கதகதப்பு காட்டி வசூல் நடத்திகிட்டு . வீட்டை பூட்டிகிட்டு போயிடிச்சு, பல நாள் ஆச்சு. வாரங்கள் ஓடிச்சி ஆனா, போன தம்பதி அதுக்கப்புறம் வரவே யில்லை.
மெயின் பிக்சரை பார்க்காமலேபணத்தை பறிகொடுத்த கோஷ்டிகளுக்கு வெளியே சொல்லமுடியலை. இதைவிட ஷாக்கான ரெண்டு விஷயம் அவங்களுக்கு பின்னாடித்தான் தெரிஞ்சது.
முதல் விஷயம், அந்த தெரு மட்டுமில்ல. அந்த ஏரியாவுலயே பரவலா, அந்த லேடி கறந்த தொகை பத்து லட்சம்..1997ல்.
இரண்டாவது ஷாக்கான விஷயத்தை அப்புறம் சொல்றோம்
சம்பவம் நடந்த வெளியூரிலிருந்து நம்ம நண்பர், அவரே பாதிக்கப்பட்டதால்தான் நம்மிடம் தொடர்பு கொண்டார். கணவன் மனைவி அடையாளங்களோடு ஒரு கிரைம் ரிப்போர்ட்டர்கிட்ட விஷயத்தை சொல்லி விசாரிச்சு ஹெல்ப் பண்ணுப்பான்னு சொன்னோம். நாலைந்து நாள் கழித்து அவர் பதிலோட டெலிபோன் லைன்ல வந்தாரு அவர் சொன்னதுதான் இரண்டாவது ஷாக்கான விஷயம்.. ''தலைவரே அது பக்கா அயிட்டம், கூட வந்தவன் அவங்க வீட்டுக்காரன் இல்லை. தொழில் முறை மாமா..''
வீடு புடிச்சி குடுத்த புரோக்கர் கிட்டகேட்டா அவர் கிட்டயும் தப்புத்தப்பா தகவல்கள்.
பொம்பளை விஷயத்துல பணத்தை ஏமாந்ததால குடும்பத்துக்கு பயந்துகிட்டு ஒருத்தரும் போலீசுக்கு போகல, நம்ம நண்பரும்தான்....
ஆயிரம் ரூபாய்க்கே அதகளமா ஸ்வீட் கிடைக்கிற அந்தகாலத்துல, பத்தாயிரம் குடுத்து வெறும் குச்சி மட்டும் சாப்பிட்டு ஏமாந்திருக்காங்க..
இப்போ எதுக்கு இதையெல்லாம் சொல்றோம்னா, சமூக வலைத்தளங்கள்ல வர்ற தகவல்கள், நெஞ்சை நக்கற சோக வீடியோக்கள்ல 100க்கு 90 பர்சென்ட் வதந்தி மற்றும் செட்டப் வீடியோஸ்..அது தெரியாமத்தான் நம்ம ஜனங்க கருத்து மழையும் ஷேர் மழையும் பொழிஞ்சிகிட்டு இருக்காங்க..
சமூக வலைத்தளங்களில் எடுத்த எடுப்பிலே நம்ப மறுக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள்... அது உண்மையை ஆராயும் புத்தியை உங்களுக்கு கண்டிப்பாக கொடுக்கும்..
நம்மை விட கரை கண்டு நுரை தள்ளிய சீனியர் கிரைம் ரிப்போர்களிடம் கேட்டால் இன்னும் பலப் பல அதிர்ச்சியான விஷயங்களை சொல்வார்கள்.
🖊ஏழுமலை வெங்கடேசன்
மூத்த பத்திரிகையாளர்