கொரானா பாதிப்பு ஐ.பி.எல். போட்டி ரத்தாகுமா?
கொரானா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி, தற்போது இந்தியாவிலும் குறிப்பாக உ.பி., ராஜஸ்தான், டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் உட்பட தமிழகத்திலும் கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரானா பரவுவதை தடுக்க பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுவருகிறது.
தமிழகத்தில் கொரானா
ஓமன் நாட்டிற்கு கட்டுமான வேலைக்குச் சென்ற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது தொழிலாளி ஒருவர் மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு விமான மூலம் 28ம் தேதி சென்னை வந்துள்ளார். மஸ்கட் விமானம் சென்னை வந்து இறங்கியதும் கட்டுமான தொழிலாளிக்கு விமான நிலையத்தில் தீவிர உடல்வெப்ப மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ குழுவினர் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அனுப்பிவைத்துள்ளனார். இருதினங்கள் கழித்து கடுமையான காய்ச்சலுடன் சளி, இருமல் என கடுமையாக வாட்டியதால் அவதிக்குள்ளான அவர் மாநில சுகாதரத்துறை உதவி கட்டுப்பாட்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக் குறித்து தெரிவித்துள்ளார். மார்ச் 2ம் தேதி அவரை காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சைக்காக சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, ரத்த மாதிரி சேமிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 48 மணி நேரம் கடந்த நிலையில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்ட கொரானா வார்டில் கிருமிகளை அழிக்கும் வகையில் சுத்தம் செய்வதற்காக கொரானா பாதிப்பிற்குள்ளான தொழிலாளியை அங்கிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்பட்டுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றியுள்ளனர்.
வார்டு சுத்தம் படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அவரை 5ம் தேதி ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனைக்கு உள்ள தனிமைபடுத்தப்பட்ட வார்டுக்கு கொண்டுவரப்ப்டடார்.
கருத்தில் கொண்டு அவருடன் அவரது மனைவியையும் பாதுகாப்புடன் தங்குவதற்கு அனுமதித்து உள்ளனர். இதையடுத்து சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட இரத்த மாதிரி கொரானாவைரஸ் தொற்று இருப்பதை புனேவில் உள்ள ஆய்வுகூடமும் உறுதிபடுத்தியது.
அதன்பின்னர் கூட தமிழகத்தில் ஒருவர், கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிவிக்காமல் தமிழக சுகாதாரதுறை ரகசியம் காத்து வந்தது.
இந்நிலையில் 7ம் தேதி மாலை மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் தமிழர் ஒருவருக்கு கொராணா பாதிப்பு என அறிவித்தார்.
இதனால் தமிழகத்திற்கு உள்ளேயும் கொரானா வந்து விட்ட தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
தமிழக சுகாதாரத்துறையினர் கொரானா ஆரம்பக்கட்டத்தில் பரவாது எனவே அவருடன் மஸ்கட்டிலிருந்து விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கும் கொரானா பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஐ.பி.எல். போட்டி
இதனிடையே வரும் மார்ச் 29 ம் தேதி தொடங்கி மும்பை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, மொஹாலி, ஜெய்பூர் ஆகிய இடங்களில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
ஐ.பி.எல் போட்டி துவங்க உள்ள நிலையில் சென்னையில் தோனி உட்பட கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதை பார்ப்பதற்கு தற்சமயம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூட்டம் சேப்பாக்கம் இரயில்வே நிலையத்தின் எதிரே உள்ள ஸ்டேடியத்தின் நுழைவாயிலில் அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவிப்பு வெளியாகிய வண்ணம் உள்ளது. ஆனால் ஐ.பி.எல் போட்டி பற்றி அரசு எந்த ஒரு கவனமும் எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஐ.பி.எல். போட்டி நடந்தால் ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில் போட்டி கண்டுகளிப்பார்கள். இதில் கொரானா பாதித்த நபர் இருக்கும் பட்சத்தில் நோய் எளிதாக பரவும். எனவே, தற்போது கொரானா நாடுமுழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இப்படியிருக்க தற்போது ஐ.பி.எல் போட்டி அவசியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு இதை கருத்தில் கொண்டு ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
தடுப்பு நடவடிக்கை
80சதவிகித கொரானா தொற்று கைகளால் தான் பரவுகிறது. இரும்பும் பொழுதும், தும்பும் பொழுதும் கைக்குட்டை வைத்து முகத்தை நன்றாக மறைத்து வைத்து தும்ப வேண்டும். அருகில் உள்ளோருக்கு பரவுவதை இது தடுக்கும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி தெரிவித்துள்ளார்.