இராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கான பூமி பூஜை


(1.3.2020) இராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கான பூமி பூஜையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், மாண்புமிகு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். உடன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், இ.ஆ.ப., இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.