கடல் அரிப்பை தடுக்கும் சுவர்; தரமின்றி இருந்ததால் இடிந்து விழுந்தது
தென்மேற்கு பருவகாற்றால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு பாம்பன் குந்துகாலில் உள்ள மீனவர்களின் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்து மீனவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதை தவிர்க்க இரண்டரை வருடங்களுக்கு முன் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.43.40 லட்சத்தில் 560 மீட்டரில் சிமெண்ட் கலவையில் தடுப்பு சுவர் அமைத்தனர். இச்சுவர் தரமின்றி இருந்தது. இந்நிலையில் 100 அடி நீளத்திற்கு தடுப்பு சுவர் இடிந்தது. ரூ.43.40 லட்சம் மக்கள் பணம் வீணாகியது.