தர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்தது சரியே
தர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்தது சரியே என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் தர்பார். இத்திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தர்பார் படத்தில் ஒரு காட்சியில் காசு இருந்தா ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம் என சசிகலாவை மறைமுகமாக விமர்சிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்தது சரியானதுதான். சிறப்புக்காட்சி விவகாரத்தில் விஜய்யின் பிகில் படத்துக்கும், ரஜினியின் தர்பார் படத்துக்கும் எந்த பாரபட்சமும் காட்டவில்லை . காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை பெறலாம் என்றார்.