தனியொருவன் நினைத்துவிட்டால்...


இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அணு ஆயுதத்தைவிடக் கொடியது பிளாஸ்டிக். நிலத்தில் இதனுடைய விளைவுகளை நேரடியாகவே நாம் பார்க்கிறோம். ஆபத்தை உணர்ந்தாலும் அதனை பயன்படுத்துவதை இன்றளவும் நாம் நிறுத்தவில்லை . நிலத்தில் நாம் விளைவுகளை நேரடியாக பார்க்க கூடும். இதுபோன்றுதான் கடலிலும். பான்றுதான் கவி கடல் வாழ் உயிரினங்களும் பெரும் ஆபத்தை -இப்போது பிளாஸ்டிக்கால் எதிர்க்கொண்டுள்ளது. திமிங்கலங்கள், கடல் சிங்கங்கள், கடல் குதிரைகள், சிறு மீன்கள் என அனைத்தும் பிளாஸ்டிக்கால் செத்து மடியும் செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. இதனை படித்து வெறுமனே 'உச்' கொட்டிவிட்டு செல்வது நம்முடைய இரக்கத்தை பிரதிபலிக்காது. இதனை தடுக்க நம்மால் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பூமிக்கு விஷமாகும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


சரி இப்போது ஏற்கனவே மனிதர்கள் வீசிய பிளாஸ்டிக் கழிவுகளை என்ன செய்வது? என்ற கேள்விதான் பெரும் கேள்வியாக உள்ளது. 1950ம் ஆண்டிலிருந்து மனிதன் 8.3 பில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை பூமியில் உருவாக்கியுள்ளான். இப்போது கடல் எப்படி பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு ஆபத்தை சேர்த்து ° வைத்துள்ளோம்.


உலகிலுள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டன் வீதம், இதுவரை சுமார் 15 கோடிடன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ((National University of Singapore) ஆராய்ச்சியாளர்கள். அதாவது, ஒரு நிமிடத்துக்கு ஒரு லாரி பிளாஸ்டிக் கப்பைகளைகடலில் கொட்டிக்கொண்டிருக்கிறோம். இவை கடல் நீரோட்டத்தால் அடித்துச்செல்லப்பட்டு, ஐந்து இடங்களில் மிகப் பெரிய குப்பைத் தீவுகளாக மிதந்து கொண்டிருக்கின்றன. 'இப்படித் தொடர்ந்து கொட்டிக்கொண்டிருந்தால், 2050ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களைவிட பிளாஸ்டிக் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும். அவை மீன்களின் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைத்துவிடும்' என்கிறார்கள். இந்த ஆபத்தான சூழ்நிலையில் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து மீனவர் ஒருவர் சுயமாகவே கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ள தொடங்கிவிட்டார்.


கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த மீனவர் பிரியேஷ் (வயது 30). படிப்பில் : மிகவும் சுட்டியான பிரியேசுக்கு பள்ளிக்காலம் வறுமையில்தான் வாடியது. அதனால் 8ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை . இதனையடுத்து வறுமையை போக்க கடல் அன்னைதான் துணையென்று வலையை தூக்கிக் கொண்டு கடலுக்கு சென்றார். தன்னுடைய 14 வயதில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். ஆனால் கல்வியின் மீதான அவருடைய நாட்டம் குறையவில்லை. எப்படியாவது 10ம் வகுப்பை முடிக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பிரியேஷ், ஆர்வமாக கற்று வருகிறார். வரும் டிசம்பரில் தேர்வு எழுதவுள்ளார்.


பிரியேஷ் இத்தேர்வுக்காக சிறப்பு வகுப்பிற்கும் செல்கிறார். அவருக்கு கற்பிக்கும் ஆசிரியை ஸ்ருதி, ஒருநாள் மாணவர்களிடம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் காரணிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதி எடுத்து வரச் சொல்லி இருக்கிறார். மாணவர்களும் அப்படியே கட்டுரையுடன் மறுநாள் வகுப்பறையில் ஆஜராகி இருக்கிறார்கள். அவர்களுடைய கட்டுரையெல்லாம் நம்முடைய சுற்றுப்புறங்கள், வாழ்விடங்கள், வீடுகள் எப்படி மாசுபடுகிறது, அவற்றை எப்படி சுத்தமாக வைப்பது என்பது போன்றே இருந்தது. ஆனால் பிரியேஷுக்கு அவற்றை பற்றி எழுதுவதை காட்டிலும் தனது தினசரிப் பிரச்னையான கடலில் சிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி எழுத வேண்டும் என்ற தொரு ஆர்வம். அதனை அதிகவனத்துடன் பூர்த்தியும் செய்தார்.


இதனைகட்டுரையுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் இருந்து தினசரி நம்மால் முடிந்தவரையில் அப்புறப்படுத்த வேண்டும் என்ற தலையாய கடமையை முதுகில் சுமக்கவும் தொடங்கிவிட்டார். முதலில் கடலில் மீன்பிடிக்க செல்கையில் தன்னுடைய வலையில் சிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் வெளியே கொண்டுவருவார். பின்னர் பிளாஸ்டிக் கழிவுகளை தேடி வலை விரித்து அவற்றை அகற்றும் பணியையும் தொடங்கிவிட்டார். இதற்காக பலமணி நேரங்கள் நடுக்கடலில் காத்திருக்க தொடங்கினார். அப்படி சேரும் பிளாஸ்டிக் குப்பைகளை கரையில் வந்து கொட்டினார்.


வழக்கம்போல் இந்த சமூதாயம் அவருடைய முயற்சியை ஏளனம் செய்ய தொடங்கிவிட்டது. கடல் எவ்வளவு பெரியது, அதுல பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்தா நம்மால் என்னபண்ணிட முடியும்? என்று கூற தொடங்கிவிட்டனர். ஆனால் எதனையும் பிரியேஷ் காதில் வாங்கவில்லை. நேராக ஊர் பஞ்சாயத்தாரை அணுகிய பிரியேஷ் கடலில் சிக்கிய பிளாஸ்டிக் கழிவுகளுடன் தான் எடுத்த புகைப்படங்களை காட்டினார். மேலும் எப்போதெல்லாம் இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் சிக்குகின்றனவோ அந்த இடங்களில் எல்லாம் மீன்கள் எண்ணிக்கை குறைவாக இருந்திருப்பதாகவும், அவற்றை நீக்கிய பின்னர் ஓரிரு நாட்களில் அதே இடங்களுக்கு மீன் பிடிக்க சென்றால் அப்போது அங்கே கணிசமாக மீன்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் கிராமத்தாருக்கு ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். இதனையெல்லாம் விளக்கிய பின்னர் கிராமப் பஞ்சாயத்து அவருக்கு உதவ முன்வந்தது. அவருக்கு உதவிகரமாக பிளாஸ்டிக் சுத்திகரிப்பு கூடம் ஒன்றை ஊர்ப் பொதுவில் நிர்மாணிக்கப்பட்டது. அவருடையை சேவையை யும் ஊக்குவித்தனர்.


கேரளாவில் ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழைக் காலமாகும். இக்காலங்களில் கடல்பகுதி வழக்கத்திற்கு மாறாக கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் இரு மாதங்களிலும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரு மாதங்களிலும் நாட்டுப்படகுகளுக்கு மட்டுமே அனுமதியாகும். அதுவும் பெரும் ஆபத்தைதான் எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும். அவர்களை கடலில் இருந்து மீட்க அரசு மீன்வளத்துறை சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது. இப்போது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முடியாது என வருத்தம் பிரியேஷிடம் உள்ளது. நாட்டுப்படகில் சென்றால் நான் படகோட்டியாக செல்ல வேண்டும். அந்த வேலைக்கு நடுவே கடலில் பிளாஸ்டிக் சேகரிக்க முடியாது என்று வருந்துகிறார். இருப்பினும் இந்த 2 மாதங்கள் முடிந்ததும் மீண்டும் நான் என் பழைய வேலையை தொடங்கவிருக்கிறேன் என்கிறார் பிரியேஷ்.


பிரியேசுக்கு தற்போது கடலை மாசு படுத்தி கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி மேலும் ஆராய்ச்சியை மேற்கொண்டு, உலகின் முன்னதாக மிகப் பெரிய ஆய்வு கட்டுரையை சமர்பிக்க வேண்டும் என்பது ஆசையாகும். மேலும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகளை குழந்தைகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஏனெனில் மாற்றம் என்பது எப்போதுமே குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தால் மட்டுமே அது முழு வாழ்க்கைக்குமான நிரந்தரப் பாடங்களாக மனதில் இருக்கும். (தமிழக அரசு பிளாஸ்டிக் தடை கொண்டுவந்தாலும் பொதுமக்களாகிய நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோம் என்பதை சற்று யோசியுங்கள். தனிமனிதன் பொறுப் பின்றி பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது சாத்தியமில்லை ). பிளாஸ்டிக் மாசுபாட்டை பற்றி பெரியவர்களிடத்தில் பேசிப் புரிய வைப்பதை குழந்தைகளிடத்தில் எளிதில் புரிய வைப்பதே தனது நோக்கம் என்கிறார் பிரியேஷ்.


பிரியேஷ். ஒரு மீனவனாக கடலன்னைக்கு அவர் செய்யும் பணிக்கு பாராட்ட வார்த்தைகளே கிடையாது . கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தும் அவருடைய பணி மேலும் சிறக்க, அவருடைய நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள். இந்த தேசத்தில் பிரியேஷ் போன்ற மனிதர்கள் அரிதானவர்கள்தான்& பிளாஸ்டிக் பொருட்களைபயன்படுத்தமாட்டேன் என உறுதியெடுக்கள்; அதன்படி நடந்துக்கொள்ளுங்கள்& ஏனென்றால் இந்த பூமியை சுகாதாரமாக நம்முடைய குழந்தைகளுக்கும் நாம் கொடுக்க வேண்டும். இந்த பூமிமனிதர்களுக்கானது மட்டுமல்ல கோடிக்கணக்கான உயிரினங்களுக்கானது & பொறுப்புடன் செயல்படுவோம்& பிளாஸ்டிக் ஒழிப்போம்.