கடல் மீன்களின் இணை கவர்தல் இரகசியங்கள்
அந்த ஏரிக்கரையில் நின்று கொண்டு நீர் அலைகளில் மேயும் மீன் அலைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்த சமயம் என் எண்ண அலைகளை நிலைகுலையச் செய்யும் விதமாக அந்த அழுகையும் கூச்சலும் அமைந்தது.
திரும்பி பார்த்தால், குடும்பச் சண்டை போலும். ஏதோ வீட்டுக்குள் நடப்பதை இடப்பற்றாக்குறை காரணமாக வெளியே அரங்கேற்றுகிறார்கள் என்று திரும்பியும் கடமையே கண்ணாக மீன்களைக் கவனிக்கத்துவங்கினேன்.
இருப்பினும் என் கவனத்த்ை திருப்பும் விதமாக அக்கம் பக்கத்தார் உள்ளே நுழைந்து அவரவர் கருத்துக்களைத் திணிக்கத்துவங்கினர். ''முதுகெலும்பு இல்லாதவன் அடுத்தவன் பேச்சைக் கேட்டு வீட்டுல ராவடிபண்ணுறான்” என சிலர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
ஆர்வமாய் அறிவியல் பயின்று அதீத விருப்பத்தினால் மீன்களைக் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எனக்கு, அந்த வாசகங்கள் சிந்தனையை இன்னும் தூண்டுவதாய் அமைந்தன.
உலகின் முதல் முதுகெலும்புள்ள உயிரினம் மீன்களே. சுறாமீன்கள் கள், இன்னும் சில வகை நீர்வாழ்வன வற்றையும் நாம் மீன்கள் என்றாலும் அவைமுதுகெலும்பில்லாத கடல் வாழ் வனவே.
இருப்பினும் மீன்களின் குடும்ப வாழ்க்கையைக் கவனித்தால் அவைகளின் இணைதேடுதலும் (Courtship) குழந்தை பராமரிப்பும் (Parental care) நம்மை வியப்பின் உச்சத்தில் நிறுத்துகின்றன.
சமீபகாலமாக ஒரு காணொளி Whats appல் அதிகமாக பகிரப்பட்டது.
ஒரு மீன் சுதர்சன சக்கரம் வரைவதாக பகிரப்பட்ட அந்த காணொளி உண்மையில் இணை தேடுதலில் இணையால் தேர்வு செய்யப்பட நடந்த ஒரு செயல்முறைத் தேர்வின் காட்சியே ஆகும்.
அதற்கு உதாரணமாக ஜப்பானிய பலூன் மீன்களை கூறலாம்.
கூடுகட்டும் மீன்களை அவை கட்டும் கூடுகளை வைத்துக் 'குமிழிக் கூடு' கட்டுவன, 'கடல் புல்' கூடு கட்டுவன, 'மணற்கூடு' கட்டுவன என வகைப் படுத்தலாம்.
''காயமே இது பொய்யடா... காற்றடைத்த வெறும் பையடா...'' எனும் தத்துவத்தை மீன்களும் பின்பற்றுமோ எனும் அளவிற்கு பாரடைஸ் மீன் எனும் ஒரு வகை மீன் வெறும் காற்றுக் குமிழ்களை உமிழ் நீரால் போர்த்தி கூடுகளை உருவாக்குகிறது.
இயற்கையோடு இயைந்து வாழ விரும்பும் ஸ்டிக்கில் பேக் (Stickle Back) மீன்கள் கடல் புல்லில் மிக நேர்த்தியாய் கூடுகட்டி பெண் மீனை கவர்ந்து, பெண் மீன் முட்டையிட்டதும் ஆண் மீன் அந்த கூட்டினை காவல் காக்கிறது.
'சால்மன் வகை மீன்களோ கடல் மண்ணில் குழி தோண்டி பெண் மீன் அதில் முட்டையிட ஆவன செய்கின்றன'
ஜப்பானிய ஆண் பலூன் மீன் (Japanese Puffer Fish) தன் இணையை வசீகரிக்க ஆழ்கடல் மணலில் கட்டும் கோட்டையைத் தான் மனிதர்கள் தங்கள் கற்பனை சக்தியை பயன்படுத்தி சுதர்சன சக்கரம் என வர்ணிக்கிறற்கள். அந்த பெண் மீன் மிகச்சிறந்த கோட்டையைக் கட்டிய மீனை இணையாகத் தேர்வு செய்யும் என நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆராய்ச்சிகளும், ஆழ்கடல் கவனிப்புகளும் அநேக இணை தேர்விற்கான வெற்றிக்குறிப்புகளைப் பதிவு செய்கின்றன. அவற்றுள் சில:
1. சில வகை மீன்கள் இணை தேடல் சமயங்களில் மிகவும் கவர்ச்சி மிகு வண்ணங்களில் தன்னுடைய வால் துடுப்பையும், பின் துடுப்புகளையும் ஹார்மோன் செயல்பட்டினால் மாற்றி தன் இணையைக் கவர முற்படும். அதிக வண்ணம் வெளிப்படுத்தும் மீன்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்படுமாம்.
2. கடல் குதிரை நாம் அனைவரும் அறிந்த ஒரு மீன் வகை 'Dirty Dance | என ஆராய்ச்சியாளர்கள் பெயரிடும் ஒருவகை நடனம். ஆடி தன் திறமையினை வெளிப்படுத்தி அதன் மூலம் தேர்வாகின்றன.
இன்னும் சொல்லப்போனால் தேர்வான பின் கூட அந்த இணை தினமும் காலையில் நடனம் ஆடி தங்களுக்கு இடையே உள்ள அன்பினை பலப்படுத்திக் கொள்ளுமாம்.
கடல் குதிரை வியப்பூட்டும் இன்னொரு குணத்தையும் கொண்டுள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் மரபினைக் கடைபிடிக்கின்றனவாம். எனில் அவை ஆடுவது எப்படி அசிங்க நடனமாகும் (Dirty Dance) அதை அபூர்வ நடனமாக அல்லவா, குறிப்பிட்டிருக்க வேண்டும்.
3. Druninter Fish எனப்படும் ஒரு வகை மீனோ தன்னுடைய குரல் திறமையில் வித்தியாசமான ஒளியினை எழுப்பி பெண்மீனைக் கவருமாம். ஆடி,ஆடி, பாடி திறமையை வெளிப்படுத்தும் மீன்கள் அதிகமாகத் தேர்வாகின்றன.
4. கூடுகட்டும் திறமையுள்ள மீன்கள், எத்தனை நேர்த்தியாய் பெண் மீன் முட்டையிடுவதற்கு வசதியாய் கட்டுகிறதோ அவை எளிதில் தேர்வாகுமாம். இதில் முன்னால் கூறிய ஜப்பானிய பலூன் மீன்களைக் கூறலாம்.
5. சடுதியில் இரையைப் பிடிக்கும் மீன்களை பெண்மீன்கள் அதிமாக தேர்வு செய்யுமாம் . பின்னே, முட்டையிட்டு அசதியாக இருக்கும் சமயங்களில் மூன்று வேளை உணவிற்கும் நான் பொறுப்பு என்று சொல்லும் மீன்களுக்கு மவுசு'அதிகம் தானே.
இது இப்படியென்றால் முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அந்த குஞ்சுகளைப் பாதுகாத்து பராமரிப்பதில் மீன்களுக்கு இணை அவையே என்பேன்.
'கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றினேன், '' நீ உண்ண நான் பட்டினி கிடந்தேன்'' என்றெல்லாம் சொல்லும் பெற்றோரின் கவனத்திற்கு,
6. திலப்பியா (நம்மூர் ஜிலேபி கொண்டையும் இந்த பேரினம் தான்) என்னும் ஒரு வகை மீனின் பெண்முட்டையிட்டதும் அந்த ஆண் முட்டைகளை வாயில் வைத்துப் பாதுகாக்கிறது.
பொரிந்த குஞ்சுகள் சிறிது நேரம் வெளியே அப்பாவின் வாயைச் சுற்றி விளையாடி விட்டு ஆபத்து என அறிந்தால் மறுபடியும் வாயினுள் தஞ்சம் புகுந்து சொன்னமாம் இதில் இன்னொரு சிற்றினமீன் குஞ்சுகளைச் சுற்றி முதலில் பெண் (தாயும்) மீனும் அடுத்ததாக ஆண் (தந்தையும்) மீனும் பாதுகாப்பு வளையமாயச் சுற்றி வந்து காக்குமாம்.
7. உவர் கெழுறு மீன்க ளும் (Brackish Vater Cat Fish) இதேபோல் முட்டைகளை வாயில் தாங்கி பாதுகாக்கின்றன. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்து பெரிதாகும் வரை ஆண்மீன்கள் உணவே உட்கொள்ளாதாம்.
8. பால் சுறா மீன்கள் குழந்தை பராமரிப்பின் உச்சநிலையாகக் கருதப்படும் குட்டிபோடும் பழக்கத்தை கடைபிடிக்கின்றன. அந்த குட்டிகளுக்கு ஆரம்பத்திலிருந்தே அதற்கு தேவையான உணவும் அதனுடனேயே இணைத்து தரப்படுகிறதாம்.
இங்கும் கடல் குதிரையைக் கண்டு நான் வியப்ப துண்டு. இதில் பெண் மீன், ஆண் மீனின் வயிற்றின் வெளியே இருக்கும் பையில் முட்டைகளையிட்டுச் செல்கிறது. அவற்றைப் பாதுகாத்து முட்டைகளுக்கு உணவு வழங்கி உரிய நேரத்தில் சுமார் 7 நிமிட பிரசவ வலியை அனுபவித்தே ஆண் மீன் குஞ்சுகளை வெளியேற்றுகிறது.
இப்போது மனிதர்களுக்கு வரு கிறேன். முதுகெலும்பு முதன் முத லில் வந்ததாகச் சொல்லும் மீன் இனங்கள் தங்கள் குடும்பத்தினை எத்தனை அழகாகப் பராமரிக்கின்றன.
எந்த வித எதிர்பார்பு மின்றி, நீ- நான் என்ற போட்டியின்றி, நானே உழைக்கிறேன், நானே உறிஞ்சப்படுகிறேன் என்னும் சுயபச்சாதாபமின்றி , என் குழந்தைகளுக்கு நான் செய்கிறேன் எனக்கு யார் செய்வார் என்னும் ஏக்க மின்றி, இவள் / இவன் எனக்கு அடிமை, என்பேச்சேஇங்கு கேட்கப் பட வேண்டும் என்னும் ஆதிக்க உணர்வின்றி எத்தனை இலாவக மாக தங்கள் வாழ்க்கையை ஒரு மேம்பட்ட நிலையில் ஒரு அடிமட்ட சூழலில் இருந்து நடத்துகின்றன.
கடல் குதிரை எனப்படும் சின்னஞ்சிறு மீன்களை மட்டும் உதாரணமாக எடுத்துக் கொள்வோமே.
அவையும் நம்மைப்போல் ஒருவனுக்கு ஒருத்தியென்னும் பண்போடுதானே வாழ்கின்றன.
அந்த கணவன் - மனைவி மீன்கள் தங்களுக்கு இடையேயான அன்பினை பலப்படுத்த தினமும் முயற்சியெடுக்கின்றன. நாம் அவற்றைப்போல் தினமும் முயல வேண்டியதில்லை.
மாதத்தில் ஓரிரு நாட்களாவது குடும்பத்துடன் சில மணித்துளிகள் செலவு செய்து நமது மனங்களை சலவை செய்யலாமே.
நம்மால் ஏன் அது முடியவில்லை ? மனவருத்தத்துடன் இடம் பெயர்ந்தேன்.
– முனைவர் பெ.இந்திரா (எ) முத்து மீனா