ரஜினி போராட்டம் தேவையில்லை என்று கூறவில்லை... ஜெயகுமார் கருத்து!
எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயகுமார் 1,095 பயனாளிகளுக்கு 2 கோடியே 95 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வன்முறை தீர்வாகாது என்று தான் ரஜினிகாந்த் கூறியுள்ளார். போராட்டமே தேவையில்லை என அவர் கூறவில்லை. ஜனநாயக ரீதியில் நடைபெறும் போராட்டங்கள் அனுமதிக்கப்பட்ட ஒன்று. அவ்வகை போராட்டங்களுக்கு எப்போதும் அனுமதி உண்டு' என கூறியுள்ளார்.