ம்மா... (சிறுகதை)


'வணக்கம் மேடம்' என்று கூறிக்கொண்டே பளபளத்த தங்க நிறக் கோப்பையை என் கையில் கொடுக்கார்கலாச்சார். பெருமிகம் புன்னகையோடு பின்னால் நின்று கொண்டிருந்தனர் அந்த மூன்று பெண்களும்.


'மேடம் நம்ம கயல் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்துல கலக்கிட்டா. அவள அடிச்சிக்க ஆளே இல்லல்ல. ஹை ஜம்ப்ல சுபி சூப்பரா பண்ணா. ஆனா பத்து மில்லி மீட்டர்ல ராஜஸ்தான் பொண்ணு பர்ஸ்ட் வந்துட்டா...' என்றவாறே வெள்ளிக் கோப்பையொன்றையும் என் முன்னே வைத்தார்.


ரொம்பவே மகிழ்ச்சியாக இருந் தேன் நான். சமூக நலத்துறையின் சார்பாக பூனேயில் நடத்தப்பட்ட கூர்நோக்கு இல்லக் குழந்தைகளுக் கிடையேயான தடகளப் போட்டி களில் கலந்து கொண்டு வெற்றியை எனக்குப் பரிசாகக் கொண்டு வந்திருந்திருந்தனர் மாணவிகள்.


சுபிதா, கயல், ரேவதி மூவரை யும் கைக்குலுக்கி வாழ்த்தியபின், பயணம் குறித்த விவரங்கள் பற்றிக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரவர் வகுப்புகளுக்குக் கிளம்பினர்.


அறையிலிருந்து வெளியேறும் போது திரும்பிப் பார்த்து இதழ் பிரியாத அவளின் பிரத்யேகச் சிரிப்பொன்றையும் கூடுதல் பரிசாகத் தந்துவிட்டுச் சென்றாள் சுபிதா.


இங்கிருக்கும் எழுபத் தெட்டுக்குழந்தைகளில் ஒவ்வொரு வரின் பின்னாலும் ஒரு நூறு கதைகளுக்கான கரு சத்தமின்றி உறங்கிக் கிடக்கிறது. அவற்றுள் பெரும்பாலானவை துயரங் களாலும் வலிகளாலும் ஆனவை.


கடந்த கால கசப்புகள் அத்தனை யையும் ஒரு பெருமூட்டையாகக் கட்டி பரணில் பத்திரப்படுத்தி விட்டு இயல்பாகவே பேசிச் சிரித்துக் கொண்டோ அல்லது அதற்கான முயற்சியிலேயோ இருப்பார்கள் இங்குள்ள குழநதைகள்.


சுபிதா...


அணையா அகல் விளக் கொன்றின் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் கண்களுடனும் தெத்துப்பல் தெரிய சிரித்தபடி எப்போதும் துறுதுறுவென்று உற்சாகமாகவே காணப்படும் அவள்தான் எத்தனை அழகு!


அழகிற்கும் நிறத்திற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதன் உயிர்ச் சாட்சியாய் உலவிக் கொண்டிருக்கும் அவளின் கருப்பு நிறம் தான் எத்தனை வசீகரமானது.


இப்பொழுது பதினொன்றாவது படித்துக் கொண்டிருக்கும் சுபிதா இங்கு வந்து சேர்ந்தது இன்னும் நன்றாக ஞாகமிருக்கிறது.


நான் இந்தக் கூர்நோக்கு இல்லத்தின் வார்டனாகப் பணியில் சேர்ந்த அன்றுதான் அவளும் இங்கு வந்து சேர்ந்தாள்.


சிறப்புக் காவல் படையின் ஏட்டம்மா நீதிமன்ற ஆணையைக் - கொடுத்து விட்டு 'மர்டர் கேஸ் மேடம் அவங்க அம்மாவே அப்பாவை கொன்னுடுச்சி . இந்தப் பொண்ணுதான் விட்னஸ். இந்த பொண்ணப் பாத்துக்க வீட்ல வேற யாருமில்ல'... என்று கூறிக்கொண்டிருந்தவரின் பின்னால் 'தேமே'... வென்று தரையைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த குழந்தைக்கு சுமார் ஏழெட்டு வயதிருக்கும்.


தலைசீவி இரண்டு மூன்று நாளாகியிருக்கும் போல. முடிச்சு கள் கழன்றும் முழு விடுதலை கிடைக்காத ஏக்கத்தோடு பின்னலின் ஊடாகத் தொங்கிக் கொண்டிருந்தது கூந்தல்.


கொஞ்சம் இற்றுப் போய் சாரமற்றுக் கிடந்த பிளாஸ்டிக் மணி கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது.


' உன் பேரு என்னம்மா' என்றதும் நிமிர்ந்து பார்த்தவள் சன்னமான குரலில் 'சுபி.... சுபிதா'... என்று கூறிவிட்டுச் சட்டென கவிழ்ந்துக் கொண்டாள்.


அன்றிலிருந்து அவள் இல்லத்தின் உறுப்பினராகச்சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் மூன்று மாதங்களாகி யும் யாருடனும் பேசிக் கொள்ளா மல் யாரையும் பார்க்கக் கூடப் பிடிக்காதது போல தனித்தே கிடப் பாள். அதுவே அவள் மீது என்னைத் தனிக் கவனம் செலுத்த வைத்தது.


கொஞ்சம் கொஞ்ச மாக அவளைப் பேசவைக்க நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்குப் பல நாட்களுக்குப் பிறகு பலன் கிடைத்தது.


என்னுடன் அதிகம் நெருங்கிவிட்டாள்.


அவளின் கடந்த காலக் கசப்புகளையும் அதற்கு நேரெதிரான எதிர்காலக் கனவுகளையும் திட்டமிடல் களையும் அந்தச்சிறு வயதிலேயே நேர்த்தியாகக் கட்டமைத்துக் கொண்டிருந்தாள்.


குடிகார அப்பாவிடம் அம்மா பட்ட அத்தனை கஷ்டங்களையும் உடனிருந்து பார்த்தவள்.


'எப்பவுமே அடிவாங்கினு அழுவுற அம்மா அன்னைக்குச் சண்ட வந்தப்ப அப்பா கைலருந்த கட்டயப் புடுங்கி ஒரு அடி தான் அடிச்சாங்க. அப்படியே மல்லாக்க விழுந்தவருதான். அம்மா தான் கொல பண்ணிட்டாங்கன்னு ஜெயில்ல வச்சிட்டாங்க. எங்கம் மான்னா எனக்கு உசிரு மேடம். நல்ல பொடவ கட்டியோ இல்ல சிரிச்சி பேசியோ பார்த்ததேயில்ல. பாவம் அவங்க. அம்மாவ நல்லாப் பாத்துக்கணும் மேடம். நான் நல்லாப் படிச்சி பெரிய்ய ஜட்ஜ் ஆகணும். அதுக்கப்பறம் ஒரு பெரிய வீடு கட்டி அம்மாவ ராணிமாரி வச்சுக்கணும்' என்று அடிக்கடி தன் அம்மாவின் எதிர்காலத்தைக் கனவுகளால் வரைந்து கொண்டிருந்தாள் சுபிதா.


சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சுபியின் அம்மா வந்திருந்தார்.


வழக்கு முடிந்து தான்விடுதலை செய்யப்பட்டதையும் தெரிவித்து விட்டு சுபியைப் பார்க்கச் சென்றாள். அம்மாவைப் பார்த்ததும் மடியில் படுத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் சுபிதா.


சுபிதா படிப்பில் மட்டுமல்ல; விளையாட்டு, கைத்தொழில் என எல்லாவற்றிலும் அதீத ஆர்வத் தோடு ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.


இப்பொழுது பதினோரு வயதைக் கடந்திருந்தாள். இந்த இல்லத்தில் பதினெட்டு வயது வரை மட்டுமே பிள்ளைகளை வைத்துக் கொள்ளமுடியும். அதற்கு மேல் அவர்களே விரும்பினாலும் கூட தங்க முடியாது.


ஒரு நாள் சுபி என்னிடம் 'லா காலேஜ்ல எனக்கு சீட்டு கிடைக்குமா மேடம்?' என்று கேட்டதும்,


'உனக்குக் கிடைக்காம வேறு யாருக்குக் கிடைக்கப் போகுது? கண்டிப்பாகிடைக்கும்' என்றேன்.


அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) கோர்ஸில் தான் இவளை சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.


'இன்னும் ஆறு மாசத்தில் நான் அம்மா கூடப் போய்டுவேன்ல. ரொம்பச் சந்தோஷமாருக்கு மேடம். அம்மாக்கு போன் பண்றீங்களா...? பேசணும் போல இருக்கு' என்று சுபி கூறியதும் சுபி அம்மா கொடுத்து விட்டுச் சென்ற எண்ணிற்கு அழைத்தேன். அந்த எண் உபயோகத்தில் இல்லையென்று வர திரும்பத் வீட்டு முகவரிக்குக் கடிதம் அனுப்ப, 'ஆளில்லை' என அதுவும் திரும்பி வந்தது.


இப்பொழுதெல்லாம் சுபி, 'அம்மா போன் எடுத்தாங்களா மேடம்' என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாள். இல்லையென்ற என் பதிலுக்கு அமைதியாகச் சென்றுவிடுவாள்.


அன்று அலுவலகப் பணிகளில் மூழ்கியிருந்த என் முன்னே சற்றே ஒடிசலானதேகத்தோடு வந்து நின்ற பெண்மணியை அடையாளம் கண்டு கொள்வதற்கு முன்னமே அவரே பேச ஆரம்பித்தார்.


'நான் சுபியோட அம்மா. முன்னாடி கூட வந்துட்டுப் போனேனே' என்றவரை இடைமறித்து.


'ஏம்மா உனக்கு எத்தனை தடவ கால் பண்றது? லெட்டர் போட்டாலும் திரும்பி வருது என்னாச்சு உனக்கு? சுபிக்கு பதினெட்டு வயசாகப் போகுது. இதுக்கு மேல இங்க வச்சுக்க முடியாது. நீ வந்து கூட்டிட்டுப் போகனும்னு தெரியுமில்ல' பொரிந்து தள்ளினேன்.


மிடறில் இருந்த எச்சிலைக் மார்கெட்ல பார்த்தப்ப பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க. என்ன மன்னிச்சிடுங்க மேடம். என்னால அவள கூட்ணு போவ முடியாது.'


'ஏம்மா இப்படிச் சொல்ற?' என்று கேட்டு முடிப்பதற்குள் எங்கூட மில்லுல வேல பாக்கறவர், பொண்டாட்டி செத்ததுக்கு அப்புறம் கட்டிக்கிறியான்னு கேட்டார். எனக்கும் ஒரு புடிப்பு வேணுமில்ல மேடம். சரின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ரெண்டு வருஷமாச்சி. ஓரளவுக்கு நிம்மதியா போய்க்கிட்டிருக்கு. சுபி இருக்கறத அவருகிட்டச் சொல்லல. இப்பத் திடீர்னு அவளக் கூட்னு போனா என் நெலம என்னாகும்? எல்லாமே கெட்டுடும். திரும்ப நடுத்தெருவுல தான் நிக்கணும் மேடம். அதனால தயவு செஞ்சு சுபிய நீங்களே பார்த்துக்குங்க. இத உங்களப் பார்த்து நேர்ல சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்'.


ஓங்கி ஒரு அறை விடனும் எனப் பீறிட்டு எழுந்த ஆத்திரத்தை அந்தம்மாவின் தீர்க்கமானபார்வை நீர்த்துப் போகச் செய்தது.


சுபி தன் அம்மாவிற்கு ஏற்படுத்திக் கொடுக்க நினைத்த நிம்மதியான எதிர்காலம் ஏதோ வொரு வகையில் அமைந்து விட்டிருக்கலாம் எனத் தோன்றியது.


'சுபிக்கு நீங்களே ஏதாவது வழி பண்ணிவிட்டுருங்கம்மா.....'என்று கையெடுத்துக் கும் பிட்டுவிட்டு சுபியின் எதிர்காலம் குறித்தான பாரமொன்றைப் பத்திரமாய் என் மேல் இறக்கிவைத்து விட்டு விறு விறு வென படியிறங்கிச் சென்று விட்டாள்.


கனத்துக் கிடந்தது மனசு.


சுபி வருவாள். 'அம்மா போன எடுத்தாங்களா மேடம்?' என்று வழக்கம் போலவே கேட்பாள்.


அவளுக்குப் பதில் சொல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் ஒரு அம்மாவாக...


-கா.கோதைமதி