அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
கடல் வளம் பாதிக்கப்படும் அபாயம்
கடலில் வாழும் நுண்ணுயிர்கள் முதல் மிகப்பெரிய திமிங்கலம் வரை பிளாஸ்டிக்கை உண்பதை கேள்விப்படுகிறோம்.
அதற்குக் காரணம் பிளாஸ்டிக்கை பார்க்கும் போது அந்த உயிர்களின் உணவைப் போலவே காட்சியளிக்கும். அது மட்டுமல்லாது, பிளாஸ்டிக்குகள் அவற்றின் உணவைப் போலவே மணத்தையும் கொண்டுள்ளன.
அப்படிமணம் வரக்காரணம்கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீது நுண்ணுயிர்கள் சூழ்ந்து , அவற்றின் மீது, 'பிளஸ்டிஸ்பியர்' எனும்ஒரு அடுக்காகப் படர்வதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
கடல்களில் அதிகரிக்கும் பிளாஸ்டிக்:
2015 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆண்டொன்றுக்கு கடலில் மட்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கின்றன. அதாவது 8, 00, 00, 00, 000 (800 கோடி) கிலோ பிளாஸ்டிக்.
கடலுக்குள் தேங்கியிருக்கும் நீர் மட்டுமல்லாது நீரோட்டமும் இருக்கும். அது பெருங்கடல் நீரோட்டம்' (ocean current) எனப்படும்.
இந்த நீரோட்டங்களுக்குள் சென்று சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் நுண்ணியபிளாஸ்டிக் துகள்களாக நுணுங்கிவிடும். அந்தத் துகள்கள் கடைசியில் கடல் வாழ் உயிர்களால் உட்கொள்ளப்படுகின்றன.
உண்மையைச் சொல்லப் போனால் 80 லட்சம் டன் என்பது தோராயமான அளவு தான். ஏனென்றால் கடலின் மேற் பரப்பில் இருக்கும் பிளாஸ்டிக் கணக்கீட்டில் 0.3 மில்லி மீட்டர் அளவைவிட சிறியதாக இருக்கும் கழிவுகளை சேர்ப்பதில்லை.
மேற்பரப்பில் இருக்கும் கழிவு களை மட்டுமே வைத்து முழு அளவையும் சொல்ல முடியாது. காரணம், மேலே மிதக்கும் பிளாஸ் டிக் கழிவுகள் கடலில் இருக்கும் ஒட்டுமொத்த பிளாஸ்டிக்கில் ஒரு மிகச்சிறிய பங்கு மட்டுமே.
கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், 2025இல் அதன் அளவு 1.75 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று 2015 மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கை எச்சரிக்கிறது.
தீர்வுக்கு வழி:
பிளாஸ்டிக்குகள் தொடர்ந்து கடல் வாழ் உயிர்களால் உட் கொள்ளப்படும் சமயத்தில், அவற்றுக்கான பாதுகாப்பை ஏன் அறிவியல் தொழில்நுட்ப உலகம் உருவாக்கவில்லை.
பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிர்களுக்கு உண்டாக்கியுள்ள பாதிப்பின் அளவு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
திமிங்கிலங்கள், பறவைகள் ஆகியவற்றில் பிளாஸ் டிக் கழிவுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஓரளவு தெரியும். தொண்டையில் பிளாஸ்டிக் சிக்கி, அவற்றின் உணவுப் பாதையை கிழித்ததாலோ அல்லது அடைத்ததாலோ அவை உயிரிழக்கின்றன.
பிளாஸ்டிக் கடலில் கலப்பதை தடுக்கும் வழிகள்:
பசிஃபிக் பெருங் கடலை சுத்தப்படுத்த, 'ஓஷன் கிளீன் அப்' எனும் பெரு முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாதம் 500 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் இருந்து அகற்றப்படும். 2040இல் கடலில் சேரும் கழிவுகளை 90% குறைப்பதே இதன் இலக்கு.
மனிதர்களின் செயல்பாடுகள், அரசாங்க விதிமுறைகள், தொழில்துறையினரின் பங்கெடுப்பு ஆகியவை மூலமே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.
பிளாஸ்டிக்கடலில் சேரும் கடலோரப்பகுதிகளை இலக்கு வைத்து செயல்பட்டால் இந்த முயற்சி பலனளிக்கும். ஆனால், இறுதித் தீர்வு என்பது கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை நாம் வீசாமல் இருப்பதுதான். அதை தவிர்த்து இந்தப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு என்று எதுவும் இல்லை.
- நன்றி : பி.பி.சி. தமிழ்