மீனவர் சேவையில் ஒரு துறவி


- சுவாமி பிரணவானந்தா


பாராம்பரிய மீனவர்கள் அதிக மாக வாழும் தமிழகக் கடற்கரைப் பகுதியாக ராமேஸ்வரம் திகழ்கிறது.


ராமேஸ்வரம் ராமகிருஷ்ணா புரம், நடராஜபுரம், சேராங் கோட்டை, தெற்கு கரையூர், கரையூர், தனுஷ்கோடி போன்ற பகுதிகளில் ஏறக்குறைய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.


ராமநாதபுர மாவட்டக் கட லோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ' ஏராளம்.


இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டு வதாகக் கூறி இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுதல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.


இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மாற்றுத்தொழில் பயிற்சியை விவேகானந்தா குடில் என்ற சமூக சேவை நிறுவனம் பன்னெடுங்காலமாக வழங்கி வருகிறது.


விவேகாந்தா குடில் சேவை நிறுவனத்தைக் கடந்த 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் சுவாமி பிரணவானந்தா.


விவேகானந்தா குடில் சேவை நிறுவனத்தின் சார்பில் ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் பாரம்பரிய மீனவர்களுக்கு கண்ணாடி இழைப் படகுகள் (பைபர் படகுகள்) வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் நடந்தது.


3மீனவக் குடும்பத்தினருக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் இயந்திரம் பொருத்தப்படாத கண்ணாடி இழைப் படகுகள் வழங்கப்பட்டன.


சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர், பகவான் - ராமகிருஷ்ணர் ஆகியோரின் பெயர்களில் இந்தப் படகுகள் வழங்கப்பட்டன.


சுவாமி பிரணவானந்தா தலைமை வகித்த இந்த -நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் வேடராஜன், மீனவர் சங்கத் தலைவர் குமரேசன், மீன்வளத் துறை ஆய்வாளர் ரமேஷ் பாபுமற்றும் ராமேஸ்வரம் பகுதி பாரம்பரிய மீனவர்கள் கலந்து கொண்டனர்.


அந்நிகழ்வில் பேசிய சுவாமி பிரணவானந்தா “சிறு தொழில் செய்யும் படகுகளை மத்திய - மாநில அரசுகள் மானியத்துடன் மீனவர்களுக்கு வழங்கினால் மீனவர்கள் அதிக அளவில் பயன்பெற வாய்ப்புள்ளது.


இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்குப் பரிந்துரைச் செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.



யார் இந்த பிரணவானந்தா?


சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து அதற்கான பாதையைத் தேர்வு செய்தபோது “இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டால் பாராளு மன்றத்திற்குள் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு குதிப்பேன்'' என்று பேசிக் கிளர்ச்சியை ஏற்படுத்தியவர் சுவாமி பிரணவாநந்தா.


சுவாமி பிரணவானந்தா கோவை யைப் பூர்வீகமாகக் கொண்டவர். விவேகானந்தரின் மீது அதீதப் பற்றுக் கொண்டவர். அதனால் துறவியாக மாறி கடந்த 38 வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்திற்கு வந்தார்.


மீனவர்கள் அதிகம் நிறைந்த புதுரோடு பகுதியில் ராமகிருஷ்ணரின் பெயரில் நகர் ஒன்றை உருவாக்கி சுவாமி விவேகானந்தா குடில் என்கிற சேவை அமைப்பை ஏற்படுத்தினார்.


இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட்டு அகதிகளாகத் தமிழக எல்லைக்குள் வந்திறங்கும் ஈழத் தமிழர்களை மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.


மீனவப் பெண்களின் வாழ்க்கை யில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் நோக்கத்தில், தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கடல் மீன் வளர்ப்பு மையம் ஆகியவற்றின் உதவியுடன் கடல் நீர் மற்றும் நன்னீர் தொட்டிகளில் அலங்கார மீன் குஞ்சுகள் வளர்க்கும் திட்டத்தை தனது ஆசிரமத்தில் தொடங்கி நடத்தி வருகிறார்.


மதுரை அரசு வேளாண்மைப் பல் கலைக்கழகக் கல்லூரி உதவியுடனும், தமிழக மீன்வளத்துறை உதவியுடனும் மீனவப் பெண்களுக்கு மாற்றுத் தொழில் பயிற்சிகளை வழங்கி வருகிறார்.



-namadhumeenavan@gmail.com


cell : 7604981058