புற்றுநோய்க்கு மீன் உணவே மருந்து
பூக்குழலி மீன், மடவை மீன் சினைமுட்டை, மட்டி இவற்றின் சுவையைச் சாமானியர் அறிந்திருக்கவோருசித்திருக்கவோ வாய்ப்பில்லை. இவற்றின் மகத்துவம் ''தோட்டி மாதிரி உழைத்துத்துரைமாதிரி சாப்பிடும்'' நமது மீனவர் அறிவர் என்பதில் ஐயமில்லை .
உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை வாழும் அத்தனை பேரையும் தரைமட்டம் ஆகச் செய்திடும் நோய்களற்ற ஆரோக்யமான பெரு வாழ்வு வாழ்வதே நம் காணும் கனவாகவும் இருக்கிறது.
நோய்கள் குறிப்பாகப் புற்று நோய் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வரின் வாழ்வையும் புரட்டிப் போடுவதாக அமைகிறது.
பொதுவாக மீன் சாப்பிடுவதன் மூலம் புற்று நோயைப் புறமுது கிட்டு ஓடச் செய்யலாம் என அநேக ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவான ஒரு கணக்கீட்டின் படி நாளொன்றிற்குச் சராசரியாக நூறு முதல் இருநூறு கிராம் மீன் உட்கொள்பவர்களின் பட்டியலில் மீனவர் சமுதாயம் முதலிடத்தில் இருக்கிறது.
மீன் புரதத்தில் PUFA எனப்படும் Poly Unsaturated Fatty acid எனப்படும் பல் நிறைவுறா கொழுப்பு அமிலம், ஒமேகா - 3 கொழுப்பு அமிலம், இன்னபிற அமினோ அமிலங்கள், வைட்டமின் A மற்றும் அரிதான நுண்சத்தானசெலினியமும் இருப்ப தால் இவை புற்றுநோயை உருவாக் கும் காரணிகள் மீது வினைபுரிந்து அதனை அற்றுப்போகச் செய் கின்றன என்பதை நிரூபிக்கின்றன அறிவியல் ஆய்வுகள்.
ஆனால் உண்மையில் இந்த ஆய்வுகள் எல்லாம் ஆராய்ச்சிக் கூடங்களில் Cell Line எனப்படும் அறிவியல் சந்தைகளில் அறுவடை செய்யப்படும் புற்றுச் செல்களின் மீது சோதனைச் சாலைகளில் ஆய்ந்து அறியப்படுகின்றன.
கலப்படமான காற்றைச் சுவாசித்து, சத்தே இல்லா உணவை உண்டு. மாசுற்ற நீரை அருந்தி, இவை போதாதென உடலுக்கு ஒவ்வாதபழக்கங்களுக்கும் அடிமை யானவர்கள் மீன் சாப்பிடுவதால் உடலின் ஆரோக்கியம் காக்கப் படுகிறதா என அறிய, கன்னியா குமரி, ராமநாதபுரம், நாகை, சென்னை, திருவள்ளூர் ஆகிய கடற்கரையோர மாவட்டங்களின் மீனவ கிராமங்களில் ஒரு எளிய - ஆய்வு நடத்தப்பட்டது.
இவ்வாய்வின் மொத்த பங்கேற் பாளர்கள் 200 பேர். இவர்களிடம் அன்றாட உணவு மற்றும் பிற பழக்கங்கள் குறித்த 20கேள்விகள் கேட்கப்பட்டன.
சுமார் 25 முதல் 75 வயது வரை உள்ள இருபாலரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதன் வாயிலாகப் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவரும் நாளொன்றுக்கு சுமார் 200 கிராம் மீன் உட்கொள்பவர்கள். அவர்களில், தோராயமாக 32% புகை பிடிப்பவர்களாகவும் 31% புகையிலை மற்றும் அது தொடர்பான பொருட்களைப் பயன்படுத்துபவராகவும், 33% அடிக்கடி (தினமும் அல்லது வாரம் இருமுறை மது அருந்துபவராகவும் 8% எப்போதாவது (வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை) மது அருந்துபவராகவும் இருந்தனர்.
இந்த ஆய்வில் பெண்கள் மறைமுகப் புகைபிடிப்பவராக 32 % பேரும், புகையிலை - பயன்படுத்துவதில் 12% பேரும், மேலும் மது அருந்துபவர்களில் 5%க்கும் குறைவாகவும் இருந்தனர். ஆய்வின் முடிவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்கள் பகுதி வாரியாகக் கிடைத்தன. (பார்க்க: அட்டவணை)
கன்னியாகுமரியில் புற்று நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதற்குக் காரணம், அங்கு அங்கு கடற்கரை மணலில் கதிரியக்கம் கொண்ட தோரியம் செறிந்திருப்பது தி தான் என திரு. வ.கண்ணா மற்றும் குழுவினரால் 2005ல் நடத்தப்பட்ட குழுவினரால் 2005ல் நடத்தப்பட்ட ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.
இதிலிருந்து தினமும் மீனை உணவாக ஏற்று (குறைந்தது 200 கிராம்) உடலுக்கு ஒவ்வாத படி வேறெந்த பழக்கம் அற்றவர்கள் தோரியம் செறிந்த கடற்கரைச் சூழலிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.
ஒவ்வாத பழக்கங்களை உடையவர்கள் மீனை உட்காண்டு தோரியம் செறிவு இல்லாத பகுதிகளில் வாழும் பெரும்பான்மையினர் ஆ ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.
மொத்தத்தில் ஒவ்வாத பழக்கங்கள் உடல் பாதுகாப்பு சுவரில் ஒட்டையிட்டாலும் மீன் புரதங்கள் எனும் பூச்சினால் பெரும்பான்மையினர் காக்கப் படுவதாகக் கண்டறியப்பட்டது.
குறிப்பாக, மீன் உணவினை உட் கொள்வோருக்கு ஒவ்வாத பழக்கங்கள் ஏதும் இல்லையெனில் அவர்களின் ஆரோக்கிய வாழ்வு என்பது கப்பலுக்கு ஒளிகாட்டும் கலங்கரை விளக்கம் போல தெள்ளத் தெளிவாக ஒளிரும்.