இந்தியக் கடலோரக் காவல்படையில் தமிழக மீனவர்


ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர் டொயோட்டாஸ். இவர் பாரம்பரிய மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.


12ஆம் வகுப்பு வரை படித்திருந்த இவர், தந்தையுடன் சேர்ந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்தியக் கடலோரக் காவல்படையில் ஆள்சேர்ப்பு நடை பெற்றது . தமிழக அரசின் மீன்வளத்துறைச் சார்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றார்.


தேர்ச்சி பெற்று கடலோர காவல்படையில் பணியில் சேர்ந்தபின் டொயோட்டாஸ் கூறியதாவது:- 'தமிழக அரசுக்கும், தமிழக மீன்வளத்துறைக்கும் நன்றி. எனது இந்த வெற்றிக்கு என்னை ஊக்கப்படுத்திய தமிழக மீன்வளத்துறை இயக்குனர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு நன்றி.