நீர், நிலம், வனம் : கடல் (புத்தக விமர்சனம்)


நிலத்தைச் சார்ந்தது கடல் என்று நம்பிக் கொண்டிருக்கும் நமக்கு கடலைச் சார்ந்ததே நிலம் என்பது புரிந்திருக்க வாய்ப்பில்லை.


கடல் என்பது உண்மையில் நிலத்தை விடப் பெரியது. கடலை நம்பி வாழ்கின்ற மக்களை நிலப்பகுதிவாழ் மக்கள் எவ்வளவு தூரத்திற்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு ரு மிகப்பெரிய கேள்விக்குறிதான்.


அப்படியான வாழ்வியல் சூழலைக் கொண்ட கடலோடிகள் பற்றிப் பேசுவதற்கோ , எழுதுவதற்கோ தமிழ் சூழ் உலகில் சொற்பமான அறிவிஜீவிகளே உள்ளபத்திரிகையாளர் சமஸ் * 'கடல்'' என்ற புத்தகத்தின் வழியாக கடல் சார் மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரப் பூர்வ மாகவும், ஆவணப்பூர்வமாகவும் தனக்கே உரித்தான மொழி நடையில் முன்வைத்திருக்கிறார்.


தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி, கன்னியாகுமரி, மணக்குடி என்று நீளும் பட்டியலில் இந்திய கடல் எல்லையாக நாம் கருதுவது நீரோடி.


அங்கிருந்து தன்கடல் அறிமுகப் பயணத்தைத் தொடங்கும் சமஸ் திருவள்ளூர் எல்லை வரை தொடர்கிறார்.


சுமார் 12லட்சம் மக்கள் தொகை கொண்ட மீனவ கிராமங்களின் துயரம் மிகப் பெரியது. காரணம் அவர்களின் வாழ்க்கை மீதான புறக்கணிப்பு, அவர்கள் மீதான புரிதலில் உள்ள இடர்பாடு.


கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் ஒரு மீனவர் கரையில் குறைந்தது 16 குடும்பங்களுக்கேனும் வாழ்வளிக்கிறார். மீன்பிடிப் படகு, வலை உள்ளிட்ட உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள், ஐஸ் கட்டிகள், டீசல், லாரிகள், மீன்களுக்கு ஏலம் நடத்தும் தரகர்கள், ஏலம் எடுக்கும் மொத்த வியாபாரிகள் எனப் பட்டியல் நீளும்.


நம் தட்டில் வந்து விழுந்து நாம் வாய்க்குள் ஒரு மீன் போகும் முன் அது குறைந்தது 16 குடும்பங்களை வாழ்வளித்து நம்மை வந்து சேர்கிறது ஒரே ஒரு மீனவரால்.


நூல் : நீர், நிலம், வனம் : கடல்


ஆசிரியர் : சமஸ்


வெளியீடு : தி இந்து தமிழ்


விலை : ரூ. 180